Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் - மு.வீரபாண்டியன்

தவெக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் -  மு.வீரபாண்டியன்

அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே, கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது

பகிரவும் WhatsApp Facebook

புதிய அரசு பொறுப்புடனும், ஜனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசுடன் தமிழக அரசு நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பைப் பேணுவது வரவேற்கத்தக்கது. 


அதேநேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது வாக்களிக்கும் உரிமை பறிபோனதாகக் கூறப்படும் பிரச்சினைக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். 

இந்தப் பிரச்சினைக்கு எதிராக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.


அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே, கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள் அறிமுகம்
அடுத்த செய்தி
இடைத்தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்: போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

தொடர்புடைய செய்திகள்