Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக் கடைகளில் 20 புதிய வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 20 புதிய வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 4 புதிய ரக பீர்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மற்றும் எலைட் கடைகளில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மதுபான தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா மற்றும் பீர் வகைகள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.


தற்போது டாஸ்மாக் கடைகளில் 21 பீர் ரகங்கள் விற்பனையில் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது புழக்கத்தில் இருக்கும் பீர் ரகங்களின் எண்ணிக்கை 25-ஆக உயர உள்ளது.


புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள 4 பீர் ரகங்களும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. இதன் ஆரம்ப விலை குறைந்தபட்சம் ரூ.250-ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிப் பண்டிகையையொட்டி முதல்கட்டமாக இந்த புதிய பீர் ரகங்கள் அனைத்தும் டாஸ்மாக்கின் 'எலைட்' மதுபானக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
டாடா குழும கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகத் தீர்வு
அடுத்த செய்தி
தவெக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் - மு.வீரபாண்டியன்

தொடர்புடைய செய்திகள்