Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

'நியாயமான பணி கலாச்சாரத்தை உருவாக்குவது அவசியம்'

'நியாயமான பணி கலாச்சாரத்தை உருவாக்குவது அவசியம்'
சென்னையில் நடைபெற்ற சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சிங்கை ராமச்சந்திரன்.

இந்தியாவின் பெண்கள், சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் நம்பிக்கை, நியாயமான வாய்ப்புகள் நிறைந்த பணிக் கலாச்சாரத்தை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும் என ஸ்டார்ட் அப் டிஎன் அமைப்பின் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.

சென்னையில் அவதார் கரியர் கிரியேட்டர்ஸ், சேராமவுண்ட் சார்பில், "சிறந்தவற்றுள் சிறந்த நிறுவனங்களுக்கான மாநாடு, விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்தியாவின் பெண்கள், சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. மேலும், நிறுவனங்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், பிற நிறுவனங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் 'அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்பு' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.

புதிய அமைப்பு குறித்து அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இதுபோன்ற கலந்துரையாடல்களைச் சாத்தியமாக்கும் வகையில் சி.ஐ.சி. வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் மேலும் வலுப்பெறவும், பல்வேறு துறைகளிலும் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை உருவாக்கவும் உதவுவதே எங்களது நோக்கம்” என்றார்.

சேராமவுண்ட் நிறுவனத்தின் தலைவர் சுபா வி.பேரி கூறுகையில், "வெற்றிகளை மட்டுமல்லாமல், பலனளிக்காத முயற்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பாடங்கள் தோல்வியடைந்த முயற்சிகளிலிருந்தே கிடைக்கின்றன” என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சேஷசாயி பேசுகையில், “முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, மக்கள் எவ்வாறு இணைந்து பணியாற்றுகிறார்கள், இறுதியில் நிறுவனங்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை நிறுவனக் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தை உருவாக்க மனிதநேயமிக்க தலைமைத்துவமும் பொறுப்புணர்வும் அவசியம்” என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் டி.என். அமைப்பின் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பேசுகையில், “ தமிழகத்தின் தொழில்துறை வலிமை என்பது அதன் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளில் மட்டுமல்லாமல், அதன் மனித வளத்திலும் அடங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழல் மாநிலத்தின் போட்டித்திறனை மேலும் அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு நிறுவனமும் நம்பிக்கை மற்றும் நியாயமான வாய்ப்புகள் நிறைந்த பணிக் கலாசாரத்தை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

முந்தைய செய்தி
Food festival launched with 41 stalls sees poor response
அடுத்த செய்தி
Trump weighs Iran war strategy after midterm GOP drubbing

தொடர்புடைய செய்திகள்