Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கட்டண உயர்வால் விமானப் பயணிகள் எண்ணிக்கை 6.5% சரிவு

கட்டண உயர்வால் விமானப் பயணிகள் எண்ணிக்கை 6.5% சரிவு

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புள்ளிவிவரங்களின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்கள் 1.182 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.264 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.5 சதவீதம் சரிந்துள்ளது. பயணிகள் தேவை குறைந்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் வருவாயைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புள்ளிவிவரங்களின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்கள் 1.182 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.264 கோடியாக இருந்தது. இதன்மூலம் ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 6.5 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போதும் செப்டம்பரில் பயணிகள் எண்ணிக்கை 2.5 சதவீதம் சரிந்துள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வு, மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் மோதல் காரணமாக விமான வழித்தடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், விமான நிறுவனங்கள் மேற்கொண்ட சேவைக் குறைப்பு ஆகியவை இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், செப்டம்பர் மாதம் பொதுவாக விமானப் பயணங்கள் குறைவாக இருக்கும் காலமாகும். இந்தச் சூழலில் விமானக் கட்டண உயர்வும் பயணிகளின் பயண முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் விமான நிறுவனங்கள் சில வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. இதன்படி, நவம்பர் மாதத்தில் இந்திய விமான நிறுவனங்கள் வாரத்துக்கு 22,306 உள்நாட்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளி காலத்தில் வாரத்துக்கு 22,912 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 606 விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
 
 

முந்தைய செய்தி
The Seasons of Fear and Fortune
அடுத்த செய்தி
`ரேஷன் கடைகளில் தேவையான பொருட்கள் உள்ளது' - அமைச்சர் காந்திராஜ்

தொடர்புடைய செய்திகள்