Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மழை படிப்படியாகக் குறையும் - ஓரிரு இடங்களில் கனமழை

மழை படிப்படியாகக் குறையும் - ஓரிரு இடங்களில் கனமழை

தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் ஆந்திர மாநிலக் கடற்கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முரசு புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் – நரசபுரம் இடையே இன்று (நவ. 3) அதிகாலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது.


புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், புயல் ஆந்திர கடற்கரையைக் கடந்து நகர்வதால் தமிழகத்தில் மழையின் தீவிரம் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
இடைத்தேர்தல் தொகுதிகளில் ‘திடீர்’ அரசு விழாக்கள் - முதல்வர் வியூகத்தால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி
அடுத்த செய்தி
பால் விலை உயர்வு தவறான தகவல் - ஆவின் விளக்கம்

தொடர்புடைய செய்திகள்